எல்லைப் பணியாளர்கள் தமது வேலை நிறுத்த அறிவிப்பை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கத்திற்கு வேலை நிறுத்த அறிவிப்பை வழங்கியுள்ளதாக கனடாவின் பொது சேவை கூட்டணி மற்றும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் சுங்க மற்றும் குடிவரவு ஒன்றியம் தெரிவித்தது.
இந்த வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராகி வருகின்றனர். இதனால் பயணிகள் நீண்ட வரிசைகளையும் எல்லைக் கடப்புகள் மற்றும் விமான நிலையங்களில் நீண்ட தாமதங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என அவர்களது தொழிற்சங்கம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், கனேடிய விமான நிலையங்கள், நில எல்லைகள், வணிகக் கப்பல் துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் தமது உறுப்பினர்கள் தொடர் வேலை நிறுத்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என தொழிற்சங்கம் கூறியது.