தேசியம்
செய்திகள்

பாதிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் கட்டாய தடுப்பூசிகளுக்கு ஆதரவு!

மத்திய அரச ஊழியர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்த பரிசீலிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

மத்திய அரசின் பணியிடங்களில் தொழில்புரிபவர்களுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து ஆலோசிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

பெரும்பாலான கனேடியர்கள் கட்டாய தடுப்பூசிகளை ஆதரிக்கிறார்கள் என புதிய கணக்கெடுப்பொன்று தெரிவிக்கும் நிலையில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை வெளியான புதிய கருத்துக்கணிப்பின்படி, பாதிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் COVID தொற்று வகைகளின் பரவலைத் தடுக்க தடுப்பூசி பெறக்கூடியவர்களுக்கு கட்டாய தடுப்பூசிகளை வழங்குவதை ஆதரிக்கின்றனர்.

53 சதவிகிதமானவர்கள் கட்டாய தடுப்பூசியை ஆதரிக்கின்றனர். அதே நேரத்தில் 16 சதவிகிதமானவர்கள் அதை எதிர்க்கின்றனர்.

குறிப்பாக Quebec, Ontario மாகாணங்களில் கட்டாயத் தடுப்பூசிக்கு அதிகம் ஆதரவு உள்ளது. மாறாக British Columbia, Atlantic கனடா போன்ற பகுதிகளில் இதற்கு எதிரான நிலைப்பாட்டை கனேடியர்கள் கொண்டுள்ளனர்.

கட்டாய தடுப்பூசி விடயத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் எனவும் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்!

Gaya Raja

வட்டி விகிதங்கள் குறித்த அடுத்த நகர்வு புதன்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment