Quebec மாகாணம் COVID தடுப்பூசி கடவுச்சீட்டை நடைமுறைபடுத்தவுள்ளது.
மாகாண முதல்வர் François Legault வியாழக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். Quebecகில் அண்மைய காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தடுப்பூசி கடவுச்சீட்டை ஏற்க திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார்.
மாகாணம் நான்காவது அலையின் உச்சத்தில் இருப்பதாக கூறிய முதல்வர், தடுப்பூசி கடவுச்சீட்டு அதற்கு ஒரு பதிலாக செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.
வியாழக்கிழமை Quebecகில் 305 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இது May மாதம் 30ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களின் எண்ணிக்கையாகும்.