தேசியம்
செய்திகள்

தடுப்பூசி போட்ட மாணவர்களுக்கும் – போடாத மாணவர்களுக்கும் தனி விதிகள் இல்லை!

தடுப்பூசி போடாத மாணவர்கள் வகுப்பறைகளில் தனி விதிகளை எதிர்கொள்ள மாட்டார்கள் என Ontario மாகாண அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது.

மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce, மாகாண  தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore ஆகியோர் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

செவ்வாய்கிழமை வெளியான Ontario மாகாண அரசாங்கத்தின் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பும் திட்டம் குறித்து புதன்கிழமை  இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

நான்காவது அலையைத் தவிர்ப்பதற்கு மாகாணத்தின் சிறந்த வாய்ப்பாக தடுப்பூசிகள் உள்ள போதிலும்,  மாணவர்களுக்கும் பாடசாலை ஊழியர்களுக்கும்  தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படாது என அவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலையின்  எந்தவொரு நடவடிக்கைகளிலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவருக்கும் போடப்படாத மாணவருக்கும் இடையில் வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை என வைத்தியர் Moore கூறினார்.
எந்த மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது அல்லது போடப்படவில்லை என்ற விபரமும் பாடசாலை ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படாது எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் Lecce, வைத்தியர்  Moore இணைந்து கூடுதலாக 25 மில்லியன் டொலர் நிதியுதவியையும் புதன்கிழமை  அறிவித்தனர்.இது பாடசாலைகளில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் என அவர்கள் கூறினர்.

Related posts

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் எல்லையில் தாமதங்களை எதிர்பார்க்கலாம்

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரு COVID மறுமலர்ச்சி நிகழ்கிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது

Leave a Comment