தேசியம்
செய்திகள்

Scarboroughவில் வாகனம் மோதி பலியான ; தமிழ் சிறுவனின் இறுதிக் கிரிகைகள் வியாழக்கிழமை!

கடந்த சனிக்கிழமை (31 ஆம் திகதி) Scarboroughவில் வாகனம் மோதி பலியான சிறுவனின் இறுதிக் கிரிகைகள் வியாழக்கிழமை (5ஆம் திகதி) நடைபெறுகின்றன.

இந்தச் சம்பவத்தில் பலியான சிறுவன் இரண்டு வயதான ஆதித்தன் பிரசன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Scarboroughவில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் Toyota 4 Runner வகை வாகனம் மோதியதில் சிறுவன் சம்பவ இடத்தில் பலியானார்.

இவரது இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை (5ஆம் திகதி) நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் மூலம் தெரியவந்துள்ளது.

Markham நகரில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Homeஇல் காலை 9 மணிமுதல் 11.30 மணிவரை இவரது உடல் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து அங்கு ஈமைக் கிரியைகள் நடைபெற்று, Ajax நகரில் உள்ள Pine Ridge மயானத்தில் பிற்பகல் 1 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

கடந்த சனிக்கிழமை மாலை 5:15 மணியளவில் Markham & McNicoll சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. Markham வீதியில் இருந்து கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்திற்கு சென்ற கறுப்பு நிற Toyota 4 Runner வாகனம் மோதியதில் இவர் பலியானார்.

வாகன சாரதியான பெண் சம்பவ இடத்தில் Totonto காவல்துறையினரின் விசாரணைகளை எதிர்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதனையும் பதியவில்லை.

Related posts

இலங்கை வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று  கறுப்பு ஜூலை: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Ottawa போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Air Canada இந்த வாரம் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை?

Lankathas Pathmanathan

Leave a Comment