2019, 2020ஆம் ஆண்டுகளில் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு இனிவரும் காலத்தில் கனடா மீட்சி கொடுப்பனவு கிடைக்காது என தெரியவருகின்றது.
CRB எனப்படும் கனடா மீட்சி கொடுப்பனவு, 2019 அல்லது 2020 ஆம் ஆண்டிற்கான வரிகளை இதுவரை தாக்கல் செய்யாதவர்களுக்கு கிடைக்காது என கனடா அரசாங்கத்தின் இணையதளத்தில் சமீபத்திய மாற்றங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடியர்கள் அவசர COVID நிவாரண கொடுப்பனவுகளைப் பெறத் தங்கள் வரிகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் சில காலமாக வலியுறுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.