தேசியம்
செய்திகள்

Majestic City வாகனத் தரிப்பிடத்தில் ; வாகனம் மோதியதில் குழந்தை ஒன்று பலி!

Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.

சனிக்கிழமை மாலை 5:15 மணியளவில் இந்தச் சம்பவம் Markham Road and McNicoll Avenue சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது.

இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்று பலியானது என Toronto காவல்துறையினர் மூலம் தெரியவருகின்றது.

குழந்தை கடைத் தொகுதியில் இருந்து பெற்றோருடன் வாகனத் தரிப்பிடத்திற்கு செல்லும்போது Markham வீதியில் இருந்து வாகனத் தரிப்பிடத்திற்கு சென்ற கறுப்பு நிற Toyota 4 Runner வாகனம் மோதியதில் இந்த மரணம் நிகழ்ந்தது.

வாகன சாரதி சம்பவ இடத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த காவல்துறையினரின் விசாரணைகள் தொடர்கின்றது. பலியான குழந்தையின் பெயர் விபரங்களை விசாரணையாளர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட Majestic City கடைத் தொகுதியில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

Lankathas Pathmanathan

Justin Trudeau பதவி விலக வேண்டும்: Liberal கட்சிக்குள் வலுக்கும் குரல்

Lankathas Pathmanathan

Carbon வரி உயர்வை எதிர்க்கும் முதல்வர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment