September 19, 2024
தேசியம்
செய்திகள்

தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயார் – பிரதமர் Trudeau

COVID தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.நாடு முழுவதும் கனடியர்களுக்கு வழங்குவதற்காக மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை வரை 10 மில்லியன்  தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாராத அமைச்சர்  Patty Hajdu தெரிவித்தார். ஆனாலும் அவற்றில் 3.5 மில்லியன்  தடுப்பூசிகள்  எவருக்கும் வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.

திங்கட்கிழமை வரை Ontario மாகாணத்திற்கு 4 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2.5 மில்லியன் தடுப்பூசிகள் மாத்திரமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. Quebec மாகாணத்திற்கு 2.3 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1.5 மில்லியன் தடுப்பூசிகள் மாத்திரமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. Alberta மாகாணத்திற்கு 4 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 700,000 தடுப்பூசிகள் மாத்திரமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

Related posts

கொலையாளி Robert Pickton மரணம்

Lankathas Pathmanathan

குளிர்காலப் புயல் காரணமாக Torontoவில் 10 cm வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

விரைவில் தேர்தலா? – வேட்பாளர்களுக்கான அழைப்பு விடுத்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment