புதிய தனிமைப்படுத்தல் விதி விலக்கிலிருந்து கனேடியர்களை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் விலக்குகின்றன.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய பயணிகள் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுக்குள் நுழைவதற்கான தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் வந்தவுடன் தனிமைப்படுத்த வேண்டியதில்லை என புதன்கிழமை அறிவித்தன. இந்த மாற்றங்கள் August 2ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு அமுலுக்கு வருகின்றது.
புதிய தனிமைப்படுத்தப்பட்ட விதிவிலக்குகளில் கனடா சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அரசாங்கங்கள் வழங்கவில்லை.
இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்தில் தரையிறங்கும் கனேடியர்கள் வீட்டிலோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலோ 10 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் மற்றும் எட்டாம் நாள் கழித்து COVID சோதனை எடுக்க வேண்டும்.
COVID பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் ஒரு கட்டமான அணுகுமுறையை எடுத்து வருவதாக கனடாவில் உள்ள இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகராலயம் இந்த முடிவு குறித்த ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
COVID தொற்றின் போது யார், எந்த விதிமுறைகளில் நாட்டிற்கு வர முடியும் என்பது குறித்து தீர்மானிக்க ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை உரிமையிலும் தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாக இந்த முடிவு குறித்து கனடாவின் துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.