தேசியம்
செய்திகள்

September மாதம் பாடசாலைக்கு திரும்புவதற்கு Ontario தயாராக இருக்கும்!!

September மாதம் பாடசாலைக்கு திரும்புவதற்கு Ontario தயாராக இருக்கும் – விரிவான திட்டம் அடுத்த வார ஆரம்பத்தில் வெளியிடப்படும்: Ontario முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மிக விரிவான பாடசாலைக்கு திரும்பும் திட்டம் அடுத்த வார ஆரம்பத்தில் வெளியிடப்படும் என Ontario முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.

September மாதம் பாடசாலைக்கு திரும்புவதற்கு Ontario தயாராக இருக்கும் என முதல்வர் Doug Ford புதன்கிழமை தெரிவித்தார். இதனை ஒரு மிகவும் விரிவான திட்டம் என கூறிய Ford, கல்வி அமைச்சர் அடுத்த வார ஆரம்பத்தில் அந்த திட்டத்தை வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.

Ontarioவில் உள்ள இரண்டு மில்லியன் மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு திரும்ப வேண்டும் என தான் நினைப்பதாகவும் Ford கூறினார்.மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருக்கப் போகிறார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.

பாடசாலைக்கு திரும்பும் இந்த திட்டம் July மாதம் வெளியிடப்படும் என அரசாங்கம் முதலில் உறுதியளித்தது. COVID தொற்றின் மூன்றாவது அலை கட்டுப்பாட்டை மீறிய நிலையில் April முதல் Ontarioவில் உள்ள மாணவர்கள் நேரில் கற்றலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

300,000 தகுதி வாய்ந்த Ontario மாணவர்கள் முதலாவது தடுப்பூசியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் September மாதத்தில் தடுப்பூசி போடப்படாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களை விட வேறு தனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்வார்கள் என Ontarioவின் உயர் மருத்துவர் Kieran Moore நேற்று தெரிவித்திருந்தார். புதிய பாடசாலை ஆண்டிற்கான மாகாணத்தின் தொற்று பரவல் தடுப்பு மேலாண்மை திட்டம் தடுப்பூசி நிலையின் அடிப்படையில் தனித்தனி விதிகளைப் பயன்படுத்துகிறது எனவும் அவர் கூறியது நினைவு கூறத்தக்கது.

Related posts

Ontarioவில் செவ்வாய்க்கிழமை 3,453 தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

James Smith Cree முதற்குடி பாதுகாப்புக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan

இலைதுளிர் கால பொருளாதார அறிக்கை எதிர்கட்சிகளினால் விமர்சிக்கப்பட்டன

Lankathas Pathmanathan

Leave a Comment