கனடாவின் 30 ஆவது ஆளுநர் நாயகமாக Mary Simon திங்கட்கிழமை பதவியேற்றார்.
பதவியேற்ற பின்னர் ஆற்றிய உரையில் கனடாவின் முதற்குடியினருக்கான நல்லிணக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக Simon உறுதியளித்தார்.
Simon கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்பு நிகழ்வு கனடாவில் வரலாற்று ரீதியில் பிரதானமான நிகழ்வாக அமைந்தது.
ஒரு முக்கிய முதற்குடியினத் தலைவரும் முன்னாள் தூதருமான Simon, கனடாவில் மகாராணியின் பிரதிநிதியாக உள்ள முதலாவது முதற்குடி நபராவார்.