Albertaவில் புதிய COVID தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவருகின்றது.
மாகாணத்தின் புதிய தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணமடைபவர்கள் அனைவரும் COVID தடுப்பூசி பெறாதவர்கள் என Albertaவின் உயர் மருத்துவர் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் தொற்று இருப்பதாக சோதனை செய்தவர்களில் 96 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசியையும் பெறாதவர்கள் என வைத்தியர் Deena Hinshaw கூறினார்.
COVID இறப்புகளில் 91 சதவீதமானவர்களும் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதமானவர்களும் தடுப்பூசி பெறாதவர்கள் எனவும் அவர் கூறினார்.
இதே தகவலை Quebec மாகாண சுகாதார அமைச்சர் Christian Dubeயும் வெளியிட்டார்.
COVID தொற்று இருப்பதாக சோதனை செய்தவர்களிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிலும் 95 சதவீதமானவர்கள் தகுந்த தடுப்பூசி பெறாதவர்கள் என அமைச்சர் Dube குறிப்பிட்டார்.