தேர்தல்களை இலக்காகக் கொண்ட கனடாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து CSIS எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தொடர்ந்து நிலையானதும், சில சந்தர்ப்பங்களில் அதிகரித்ததுமான கனடாவுக்கு எதிரான
வெளிநாட்டு தலையீடு குறித்து கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையான CSIS எச்சரித்துள்ளது. இந்த அச்சுறுத்தல் குறித்த புதிய அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை CSIS வெளியிட்டது.
பல ஆண்டுகளாக தேர்தல்களை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான மற்றும் அதிநவீன நடவடிக்கையை கவனித்து வருவதாகவும், அதன் அதிர்வெண்ணில் தொடர்ந்து உயர்வு காணப்படுவதாகவும் CSIS கூறுகிறது.
கனடாவின் தேர்தல் முறை வலுவானது என்றாலும், வெளிநாட்டு தலையீடு நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள், அரசியல் அமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றின் இறையாண்மையின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் என CSIS எச்சரிக்கிறது.
பிரதமர் Justin Trudeau சிறுபான்மை நாடாளுமன்றத்தை சில வாரங்களில் கலைத்து, கனேடியர்களை தேர்தல் வாக்களிப்புக்கு அனுப்புவார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் CSIS உளவு சேவையின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.