COVID தொற்றின் கீழான Ottawa நகரின் அவசரகால நிலை வியாழக்கிழமை முடிவடைகின்றது.
தொற்றுடன் தொடர்புடைய Ottawa நகரத்தின் அவசரகால நிலை வியாழன் நள்ளிரவுக்குப் பின்னர் முடிவடைகிறது என Ottawa நகர முதல்வர் Jim Watson புதன்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இந்த அவசரகால நிலை அமுலுக்கு வந்து 484 நாட்களுக்குப் பின்னர் முடிவடைகிறது.
Ottawa நகராட்சி அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவருவது, நகரத்தை கொள்முதல் மற்றும் மறுசீரமைப்பதில் வேகமானதாக இருக்க அனுமதித்ததாகக் கூறிய நகர முதல்வர் Watson, இந்த அறிவித்தல் தொற்றின் முடிவைக் குறிக்கவில்லை என தெரிவித்தார்
புதன்கிழமை வரை Ottawaவில் 27,745 COVID தொற்றுகளும் 593 மரணங்களும் பதிவாகியுள்ளன.