February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதி உதவி

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைப்பதற்கான  செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதியை மத்திய, மாகாண அரசுகள் வழங்கியுள்ளன.

வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தல் மத்திய, மாகாண அரசுகளினால் வெளியிடப்பட்டன.  

கனடாவில் உட்கட்டுமான முதலிடல் திட்டத்தினூடாக நிதி பெறுவதற்கென மத்திய, மாகாண  அரசுகளால் தமிழ்ச் சமூக மைய செயற்றிட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த செயற்றிட்டத்தின் கட்டுமானத்திற்குத் தேவையான 26.3 மில்லியன் டொலர்களை அரசுகள் வழங்கியுள்ளன.

தமிழ் சமூக மையத்தின் கட்டுமானத்திற்குத் தேவையான நிதி, வரிகள் உட்பட, 40 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டில் அண்ணளவாக 14.3 மில்லியன் டொலர்களை மத்திய அரசும், 11.9 மில்லியன் டொலர்களை மாகாண  அரசும், வழங்க 9.6 மில்லியன் டொலர்களை தமிழ்க் குமுகமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மத்திய அரசின் நிதி உதவியை கனடிய துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அறிவித்தார். மாகாண அரசின் நிதி உதவியை Ontario மாகாண முதல்வர் Doug Ford அறிவித்தார்.
Toronto நகர சபை ஏற்கனவே 25 மில்லியன் டொலர்கள் பெறுமதியான காணியை தமிழ்ச் சமூக மைய செயற்றிட்டத்திற்காக நீண்டகாலக் குத்தகையாக வருடமொன்றிற்கு 1 டொலர் மற்றும் அதற்கான வரி என்ற அடிப்படையில் வழங்கியுள்ளது. இன்றைய நிகழ்வில்  கலந்து கொண்ட Toronto நகர முதல்வர் John Tory இதற்கான உறுதிமொழியை மீண்டும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் தமிழ் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, Ontario மாகாண சபை உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோரும் உரையாற்றினர். தவிரவும்  இந்த நிகழ்வில் கலந்து கொண்ட, மத்திய அமைச்சர்களான Bill Blair, Mary Ng, மாகாண அமைச்சர் Kinga Surma,  நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie ஆகியோரும்  உரையாற்றினர். 

2019ஆம் ஆண்டு November மாதத்தில் நிதியுதவிக்காக விண்ணப்பித்தபோது, தமிழ்க் குமுக அங்கத்தவர்கள் 11.2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக இரண்டு  மாதங்களில் முன்வந்து உறுதி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related posts

RCMP விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் புதிய தலைவர் இரு மொழிகளும் பேசுபவராக இருப்பது அவசியம்?

Lankathas Pathmanathan

Leave a Comment