Quebec மாகாணம் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசுகளை வழங்குகிறது .
சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் Christian Dubé இது குறித்த அறிவித்தலை வெளியிட்டார்.
COVID தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட Quebec குடியிருப்பாளர்கள் August மாதம் முழுவதும் 2 மில்லியன் டொலர்களுக்கு பரிசுகளை வெற்றி பெற தகுதி பெறுகின்றனர்.
இது ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு வெகுமதி அளிப்பது மட்டுமல்லாமல், இனி வரும் காலத்தில் தடுப்பூசி போடுவோருக்கும் வெகுமதி அளிப்பதாகும் என Dubé கூறினார்.
Alberta மற்றும் Manitoba ஆகிய மாகாணங்களும் தடுப்பூசி பெற மக்களை ஊக்குவிக்க பரிசுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது .