December 12, 2024
தேசியம்
செய்திகள்

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

COVID தடுப்பூசி பெற தகுதியான கனேடியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

12 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதத்திற்கு சமமாகும்.

செவ்வாய்க்கிழமை காலை வரை கனடா 16.7 மில்லியன் வரையான இரண்டாவது தடுப்பூசிகளையும், 26.2 மில்லியன் வரையான முதலாவது தடுப்பூசிகளையும் வழங்கியுள்ளது.

ஆனாலும் போதுமான இளைஞர் – யுவதிகள் தடுப்பூசியை பெறவில்லை என கனேடிய சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

Related posts

தற்காலிக உடன்பாட்டுக்கு LCBO தொழிலாளர்கள் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Halifax பாடசாலை கத்தி குத்து குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 15 வயது மாணவர்

Lankathas Pathmanathan

Alberta அடுத்த வாரம் COVID கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment