தேசியம்
செய்திகள்

September மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்:Ontario தலைமை மருத்துவர் அறிவுறுத்தல்!

September மாதத்தில் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என Ontario மாகாண தலைமை மருத்துவர் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற COVID தொற்று குறித்த தகவல்களை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore இந்த கருத்தை தெரிவித்தார். குளிரான காலநிலையின் ஆரம்பத்தில் தொற்றுக்கள் அதிகரிக்கும் என்ற Ontario பொது சுகாதார மையத்தின் modelling தரவுகளை தான் பார்வையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

இந்த அதிகரிப்பு முக்கியமாக தடுப்பூசி பெறாதவர்களை அதிகம் பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். September மாதம் சாத்தியமான இந்த அதிகரிப்பை எதிர்கொள்ள மாகாணம் ஏற்கனவே தயாராகி வருவதாக வைத்தியர் Moore கூறினார்.

செவ்வாய்க்கிழமை Ontarioவில் 146 தொற்றுக்களும் ஏழு மரணங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜோர்டான் மன்னர் கனடா வருகை!

Lankathas Pathmanathan

மனைவியை கொலை செய்ததற்காக தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Gaya Raja

ஊனமுற்றோர் நலன்களுக்கான புதிய சட்டமூலம்

Lankathas Pathmanathan

Leave a Comment