கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக Roseanne Archibald தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனேடிய வரலாற்றில் பெண் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கனடாவின் ஆளுநர் நாயகம் பதிவிக்கு முதற்குடி பெண் ஒருவர் இந்த வாரம் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 100 நாட்களில், முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த விரும்புவதாக Archilbald கூறினார்.
முன்னாள் வதிவிடப் பாடசாலைகளில் நில குறிப்பற்ற புதைகுழிகள், காணாமல் போன முதற்குடி பெண்கள் மற்றும் சிறுமிகள் போன்றவற்றை அவர் தான் கவனம் செலுத்தவுள்ள விடயங்களாக குறிப்பிட்டார்.