கனேடிய பிரதமரும் Saskatchewan முதல்வரும் Cowessess First Nationனுடன் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் நல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த மூலம் 1951ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக First Nation, பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் அதிகார வரம்பை மீண்டும் பெறுகின்றன.
இதேவேளை Manitobaவின் Metis கூட்டமைப்பு கனடாவுடன் சுயராஜ்யத்திற்கான உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீதி கிடைக்கும் என Manitoba Metis கூட்டமைப்பின் தலைவர் David Chartrand கூறினார்.