Ontario செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக 200க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மொத்தம் 164 தொற்றுக்களும் 9 மரணங்களும் Ontarioவில் பதிவாகின. Ontarioவின் ஏழு நாள் சராசரி தொற்றின் எண்ணிக்கை 203 ஆக உள்ளது. இது ஏழு நாட்களுக்கு முன்னர் 278 ஆக இருந்தது.
Ontarioவில் இதுவரை 15.9 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 5.8 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.