தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau தவிர்த்துள்ளார்.
பிரதமர் Trudeau விரைவில் தேர்தலுக்கான அழைப்பை வெளியிட தயாராக உள்ளார் என்ற பரிந்துரைகளை அவர் குறைத்து மதிப்பிட்டார். தேர்தலுக்கான அழைப்பை வெளியிட மாட்டேன் என உறுதி அளிக்க முடியுமா என கேட்டதற்கு, பிரதமருக்கு ஆம் என பதிலளிக்கவில்லை.
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு September மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறாது.
ஆனாலும் அதிக மக்கள் ஆதரவை எதிர்கொள்ளும் Liberal கட்சி September மாதத்திற்கு முன்னர் தேர்தல் ஒன்றுக்கான அழைப்பை வெளியிடும் என தொடர் ஊகங்கள் வெளியாகி வருகின்றது.