கனடாவில் COVID தொற்றின் மூன்றாவது அலை தடுப்பூசிகள் இல்லாதிருந்தால் அதிகமான மக்களைக் கொன்றிருக்கும் என வைத்தியர் Theresa Tam கூறினார்.
தடுப்பூசிகள் இல்லாமல் கனடாவில் மூன்றாவது அலை மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். வயதானவர்களுக்கு தொற்று நோய் ஏற்படுத்தும் தாக்கத்தை தடுப்பூசிகள் பெரிதும் குறைத்தது என Tam கூறினார்.
தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியபோது, 80 வயதிற்கு மேற்பட்ட 4,000க்கும் மேற்பட்ட கனேடியர்கள் இறந்தனர் என Health கனடாவின் தரவு தெரிவிக்கின்றது.
ஆனாலும் மூன்றாவது அலை உச்சம் அடைந்தது, 80 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றிருந்தும், அந்த வயதினரின் இறப்புகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவாக இருந்தது.