தேசியம்
செய்திகள்

கனேடியர்களின் COVID இறப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரு மடங்கு இருக்கலாம்!!

கனேடியர்களின் COVID தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கனடாவில் தொற்றின் காரணமாக சுமார் 26,230 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு அதிர்ச்சிகரமான எண்ணிக்கையாக இருந்தாலும் உண்மையான தொற்றின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவின் Royal Society வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தொற்றால் இறந்த கனேடியர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட இரு மடங்கு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதன் மூலம் தொற்றால் அறிவிக்கப்பட்ட 26,000 இறப்புகளுக்கு பதிலாக, 52,000 கனேடியர்களின் இறப்புகள் தொற்றுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

கனேடியர்களுக்கு மின்னணு விசா சேவைகளை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

Lankathas Pathmanathan

Leave a Comment