எல்லை கட்டுப்பாடுகள் குறித்த மேலதிக விவரங்கள் வரவிருக்கும் வாரங்களில் வெளியாகும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் கூடுதல் விவரங்களை எதிர்பார்க்கலாம் என பிரதமர் கூறினார். தடுப்பூசிகள் வழங்கல் தொடர்ந்து அதிகரித்து, தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்தால் பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து தளர்த்தலாம் என பிரதமர் கூறினார்.
படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் எல்லையை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தை தொடர்ந்து ஆலோசிப்பதாக Trudeau செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கனடா இரண்டு வாரங்களில் நீக்குவதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.