Quebecகின் அனைத்து பகுதிகளும் அடுத்த வாரம் பச்சை மண்டலத்திற்கு செல்கின்றன.
COVID தொற்றின் எண்ணிக்கை குறைவடைவதால் இந்த முடிவை மாகாண அரசாங்கம் எடுத்துள்ளது.
தொற்றுகள் குறைவதுடன், தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்ததால், Quebecகின் அனைத்து பகுதிகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பச்சை மண்டலத்திற்கு நகருகின்றன.
Quebecகின் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருவதாக முதல்வர் Francois Legault செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.