ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து Belarus மீது கனடாவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது.
கடந்த மாதம் இரண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பயணித்த பயணிகள் விமானத்தை கட்டாயமாக தரையிறக்கி பத்திரிகையாளர் ஒருவரை அரசியல் காரணங்களுக்காக கைது செய்ததன் எதிரொலியாக இந்த தடைகள் விதிக்கப்பட்டன.
அதேவேளை தனது சொந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர Belarus ஆட்சியாளர்களுக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது