Ontario இரண்டாவது தடுப்பூசி பெறக்கூடியவர்களுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது.
June 23 ஆம் முதல் Delta variant hot spot என அடையாளம் காணப்பட்ட பகுதியில் வசிக்கும் May மாதம் 30ஆம் திகதிக்குள் முதலாவது தடுப்பூசி பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசிக்கு பதிவு செய்ய தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
ஏற்கனவே Halton, Peel, Porcupine, Toronto, Waterloo, Wellington-Dufferin-Guelph, York பிராந்தியம் ஆகியன Delta variant hot spot என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுடன் Hamilton, Simcoe-Muskoka, Durham பிராந்தியத்தையும் Delta variant hot spotஆக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது
12 முதல் 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியின் முன்பதிவு August மாதம் 9ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.