முதற்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்துடன் கனேடிய சட்டத்தை இணைக்க முற்படும் மசோதாவை புதன்கிழமை Senate நிறைவேற்றியுள்ளது.
C-15 எனப்படும் இந்த மசோதா 61 க்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்த மசோதா சட்டமாக மாறுகிறது.
இந்த மசோதா பெரும்பாலும் முதற்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனம்,சட்டத்திற்குள் கொண்டுவருவதாக விவரிக்கப்படுகிறது. இது கனேடிய சட்டத்தில் அறிவிப்பின் பல்வேறு சரத்துக்களை நேரடியாக செயல்படுத்தாது. மாறாக, அவை செயல்படுத்த படுவதற்கான ஒரு கட்டமைப்பை அது நிறுவும்.
இந்த மசோதா சட்டமானதன் மூலம் பிரதமர் Justin Trudeauவின் தேர்தல் உறுதிப்பாடு ஒன்று நிறைவேறுகிறது.