COVID தொற்றினால் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 26 ஆயிரத்தை தாண்டியது.
புதன்கிழமை 30 புதிய மரணங்கம் கனடாவில் பதிவாகின. இதன் மூலம் கனடாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 26 ,001 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதன்கிழமை 1,033 தொற்றுகளும் கனடாவில் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் கனடாவில் மொத்த தொற்றின் எண்ணிக்கை 1,405,146 ஆக அதிகரித்துள்ளது.