24 மணி நேரத்தில் அதிக தடுப்பூசிகளை வழங்கிய புதிய மைல்கல்லை Ontario அடைந்துள்ளது.
24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் Ontarioவில் மொத்த தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 540,810 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 75 சதவீதத்திற்கு மேற்பட்ட பெரியவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். Ontarioவில் 18 சதவீதத்திற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது .
புதன்கிழமை 384 தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின. இதன் மூலம் தொடர்ந்து 10வது நாளாக 600க்கு குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகியுள்ளன.