கடந்த September மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகுறைந்த COVID தொற்றுக்களை Ontario பதிவு செய்தது.
September மாதத்தின் நடுப்பகுதியின் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக 300க்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின.சுகாதார அதிகாரிகள் 296 புதிய தொற்றுக்களையும் 13 மரணங்களையும் பதிவு செய்தனர்
இதன் மூலம் Ontarioவின் ஏழு நாள் சராசரி தற்போது 479 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு 703 ஆக இருந்தது.
இதேவேளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் கனடாவில் 700 தொற்றுக்கள் மாத்திரம் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.