கனடிய நாடாளுமன்றத்தின் கோடை இடைவேளைக்கு சில நாட்கள் மாத்திரமே மீதமுள்ள நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
கனடிய நாடாளுமன்றத்தின் கோடை இடைவேளைக்கு 10 நாட்கள் மாத்திரமே மீதமுள்ளன. இந்த நிலையில் சிறுபான்மை Liberal அரசாங்கம் முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவற்றை நிறைவேற்றும் நடவடிக்கைகளை நிறுத்தும் Conservative கட்சியின் முயற்சியை அரசாங்கம் விமர்சித்து வருகிறது.
விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதால் இந்த மசோதாக்களை இப்போது நிறைவேற்றுவதற்கான உந்துதலில் அரசாங்கம் உள்ளதான கருத்தை அரசாங்கத்தின் நாடாளுமன்ற தலைவர் Pablo Rodriguez மறுத்தார்.