இந்த வாரம் மேலும் 2.9 மில்லியன் COVID தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது.
கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இதனை உறுதிப்படுத்தினார். June மாதம் முதல் வாராந்தம் 2.4 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது. இந்த வாரம் எதிர்பார்க்கப்படும் மேலதிகமான 5 இலட்சம் தடுப்பூசிகளை Moderna விநியோகிக்க உள்ளது.
மேலதிகமாக 1 மில்லியன் AstraZeneca தடுப்பூசியை June மாத இறுதிக்குள் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இருப்பினும் அதன் விரிவான விநியோக அட்டவணை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுவரை 26 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வரை 23 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது.