மூன்று மாதங்களில் முதல் முறையாக 1,000க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்களை திங்கட்கிழமை Ontario பதிவு செய்துள்ளது.
சுகாதார அதிகாரிகள் 916 தொற்றுக்களை பதிவு செய்தனர். இது February மாதம் 17ஆம் திகதிக்கு பின்னரான அதிகுறைந்த தொற்றுக்களின் எண்ணிக்கையாகும். கடந்த ஏழு நாள்களில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 1,078 ஆக உள்ளது. இது கடந்த வாரம் 1,775 ஆக இருந்தது.
திங்கட்கிழமை 13 மரணங்களும் Ontarioவில் பதிவாகின.