தேசியம்
செய்திகள்

சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் – சில மாகாணங் களில் கட்டுப்பாடுகள் தளர்வு!

COVID தொற்றின் பரவல் அதிகரித்துள்ள சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றின் எண்ணிக்கை குறைவடையும் பகுதிகளில் தளர்வுகள் சிலவும் அறிவிக்கப்பட்டுள்ளன

Manitobaவிற்கு சுகாதாரப் பணியாளர்களையும் பிற ஆதரவாளர்களையும் அனுப்பி வைக்கவுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. கனேடிய செஞ்சிலுவை சங்கம் மற்றும் இராணுவ உதவிகள் மூலமாகவும் மருத்துவ ஊழியர்களை அனுப்பி வைக்க மத்திய அரசாங்கம்  முடிவு செய்துள்ளது.

தவிரவும் தொற்றுநோயியல் நிபுணர்களையும், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களையும் நியமிக்க தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. Newfoundland and Labradorரின் வடகிழக்கின் பரந்த பகுதிக்கு பொது சுகாதார கட்டுப்பாடுகளை சுகாதார அதிகாரிகள் விதித்தனர்.

கனடாவின் ஏனைய பகுதிகளில் கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டன. Quebec, அதன் சில பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட அவசரகால நடவடிக்கைகளை நேற்று நீக்கியது. இந்த வார இறுதியில் Quebec  முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் படிக்கான நுழைவாயிலைக் கடந்த ஒரு மாதத்திற்குள் அதன் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்குவதாக Saskatchewan அறிவித்தது, British Columbia மற்றும் Yukon அரசாங்கங்கள் பலவிதமான சுகாதார கட்டுப்பாடுகளை நீக்கியது. 

Related posts

Ontarioவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை ஆதரிக்கிறேன்: Peel சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Loh

Lankathas Pathmanathan

அடுத்த சில நாட்களில் பல Monkeypox தொற்றுக்கள் உறுதி செய்யப்படலாம்

Lankathas Pathmanathan

உள்ளக விவகாரங்களில் கனடா தொடர்ச்சியாக தலையிடுகிறது: இந்தியா குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment