Ontario மாகாணம் AstraZeneca தடுப்பூசிகளை மீண்டும் உபயோகிக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே AstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக அடுத்த வாரம் மீண்டும் AstraZenecaவை வழங்க Ontario முடிவு செய்துள்ளது. இரண்டாவது தடுப்பூசியாக மாத்திரம் AstraZeneca வழங்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Ontario மாகாணத்தின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams இந்த அறிவித்தலை வெளியிட்டார். பல்லாயிரக்கணக்கான AstraZeneca தடுப்பூசிகள் காலாவதியாகும் முன்னர் May மாதம் 31ஆம் திகதிக்குள் அவற்றை பயன்படுத்த Ontario முடிவு செய்துள்ளது.
March மாதம் 10ஆம் திகதிக்கும் March மாதம் 19ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற தகுதி பெறுகின்றனர்.
Ontario அரசாங்கத்தின் வசமுள்ள 45 ஆயிரம் AstraZeneca தடுப்பூசிகள் 10 தினங்களிலும் மேலும் 10 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த மாதமும் காலாவதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.