December 12, 2024
தேசியம்
செய்திகள்

அவசர இராணுவ -சுகாதாரப் பாதுகாப்பு உதவி – கனடிய பிரதமரிடம் கோரும் Winnipeg நகர முதல்வர்

Winnipeg நகர முதல்வர் கனடிய பிரதமரிடமிருந்து அவசர இராணுவ, சுகாதாரப் பாதுகாப்பு ஆதரவைக் கோரியுள்ளார்.

பிரதமர் Justin Trudeauவுடனான சந்திப்பின் போது Winnipeg நகர முதல்வர் Brian Bowman இந்த கோரிக்கையை முன் வைத்தார்.  பிரதமர் Trudeau, Winnipeg நகர முதல்வருடனும் Manitobaவின் முதல்வர்  Brian Pallisterருடனும்  வெள்ளிக்கிழமை  தனித்தனியாக சந்திப்புகளை  நடத்தினார்.

கனேடிய ஆயுதப்படைகள் மற்றும் பிற மாகாணங்களிலிருந்து சுகாதாரப் பணியாளர்களின் உதவியின் அவசியத்தை இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Winnipeg நகர முதல்வர் வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் உதவிகளை வழங்க Winnipeg நகர முதல்வரிடம் பிரதமர் Trudeau உறுதியளித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை Manitobaவில் மூன்று மரணங்களும் 594 தொற்றுக்களும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

February மாதம் கனடா முழுவதும் கடுமையான குளிர்?

Lankathas Pathmanathan

புதிய புற்றுநோய் கண்டறிதல் 2020இல் சரிவு

Lankathas Pathmanathan

ரஷ்யா மீதான புதிய தடை : பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment