Ontarioவில் வெள்ளிக்கிழமை மீண்டும் COVID தொற்றின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை 1,890 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். 27 மரணங்களும் அறிவிக்கப்பட்டன.
Ontarioவில் பதிவான தொற்றுகளின் ஏழு நாள் சராசரி 2,064 ஆக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த சராசரி 2,615 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Ontarioவில் 1,265 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 715 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்