Pfizer தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அங்கீகரிக்கிறது
Pfizer தடுப்பூசியை வழக்கமான குளிர்சாதன பெட்டி வெப்பநிலையில் ஒரு மாதம் வரை சேமிக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை Health கனடா அறிவித்தது.
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த புதிய வழிகாட்டுதல்கள், வழக்கமான குளிர்பதன வெப்பநிலையில், 2 Celsius முதல் 8 Celsius வரை, 31 நாட்கள் வரை தடுப்பூசிகளை சேமிக்க அனுமதிக்கின்றன.
இந்த மாற்றம் Pfizer தடுப்பூசியின் விநியோகத் திட்டங்களில் அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் என Health கனடா தெரிவித்துள்ளது.
கனடாவில் பயன்பாட்டிற்காக முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்டது Pfizer தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.