December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள்

முரண்பாடுகளுக்கு அடிப்படையாக விளங்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை காணுமாறு கனடா, ஸ்ரீலங்கா அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கனடியப் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அர்த்தமுள்ள பொறுப்புக் கூறல் நடைமுறை ஒன்றுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிப்பதுடன், நாட்டின் நீண்டகால அமைதிக்கும் செல்வச் செழிப்பிற்கும் இன்றியமையாத – நீதி, மீளிணக்கம், அனைவரையும் உள்வாங்குதல் ஆகியவற்றுக்குச் செயல்படும் அனைவருக்கும் ஆதரவை வழங்குவோம் என பிரதமர் Trudeau தனதறிக்கையில் குறிப்பிட்டார்.

கனடாவில் பல்வேறு தரப்பினரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு நினைவு குறிப்புகளை வெளியிட்டனர்.

தேசிய NDPயின் தலைவர் Jagmeet Singh, Ontario முதல்வர் Doug Ford, Ontarioவின் எதிர்க்கட்சித் தலைவி Andrea Horwath, Toronto நகர முதல்வர் John Tory, Brampton நகர முதல்வர் Patrick Brown ஆகியோரும் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் நினைவு நாளை முன்னிட்டு ஒளிப்பதிவு அறிக்கைகளை வெளியிட்டனர். அமைச்சர் Caroline Mulroney, மாகாண சபை உறுப்பினர்  விஜய் தணிகாசலம் ஆகியோர் இனப் படுகொலையின் நினைவு நாளை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

Ontario  சட்டமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை குறிக்கும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் இதற்கான கோரிக்கையை  இன்றைய அமர்வில் முன்வைத்தார். மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து உரையாற்றினார்.

திங்கட்கிழமை கனடிய நாடாளுமன்ற அமர்வின் போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து பயணிப்போம் என  Scarborough Rouge தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்திருந்தார்.

Toronto  நகரசபை  May மாதம் 18ஆம் திகதியை , தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அறிவித்தது. கடந்த வாரம் Brampton நகரசபையும் இதுபோன்றதொரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

தவிரவும் பல்வேறு கல்வி சபைகளும் தமிழ் இனப்படுகொலை நினைவு குறித்த அறிக்கைகளை வெளியிட்டன.

Related posts

Influenza காரணமாக கடந்த மாதம் British Colombiaவில் ஐந்து குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan

மற்றுமொரு இராணுவ மூத்த உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்!

Gaya Raja

Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Leave a Comment