கனடாவில் COVID தொற்றின் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது.
Ontarioவில் செவ்வாய்க்கிழமைக்கு 17 மரணங்கள் பதிவான நிலையில் கனடாவின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. இவற்றில் பெரும்பாலான இறப்புகள் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்துள்ளன.
ஆனாலும் மூன்றாவது அலை Ontario, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் பல இளம் வயதினர் மரணமடைய காரணமாகியுள்ளது.