COVID தொற்று பரவுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Air Canadaவின் பேச்சாளர் கூறினார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமான பயணங்கள் நீட்டிக்கப்படுவதை எதிர்பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். Air Canada பாகிஸ்தானுக்கு விமான சேவைகளை நடத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலிருந்து வரும் விமானங்களுக்கு April மாதம் 22 ஆம் திகதி கனடிய அரசாங்கம் முதலில் தடை அறிவித்திருந்தது.
இந்தியாவிலும் பாகிஸ்தானில் உள்ள தொற்றின் நிலைமையை போக்குவரத்து அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பொது சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.