தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம் என அழைக்கப்படும் மசோதா 104 புதன்கிழமை Ontarioவில் அதிகாரப்பூர்வமாக சட்டமாகியது.
தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வார முன்மொழிவு கடந்த ஆறாம் திகதி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி, மாகாண ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
புதன்கிழமை மாலை Ontarioவின் மாகாண ஆளுநர் மாண்புமிகு Elizabeth Dowdeswell Ontarioவில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வார மசோதாவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதலளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பமாகும் தினமே, அதிகாரபூர்வமாக இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.