தேசியம்
செய்திகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Jody Wilson-Raybould முடிவு

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Jody Wilson-Raybould அறிவித்தார்.

உள்நாட்டு நல்லிணக்கம், காலநிலை மாற்றம், சமூக மற்றும் இன நீதி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். தனது பார்வையில் Ottawa நச்சு மற்றும் பயனற்றதாக மாறியிருப்பதை முன்னாள் நீதி அமைச்சரான Wilson-Raybould மேற்கோளிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பின்னடைவு மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றிற்கு தீர்வு காண ஆழ்ந்த மாற்றம் தேவை எனவும் அவர் கூறினார்.

British Colombiaவின் Vancouver Granville தொகுதியை Jody Wilson-Raybould, 2015ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவ படுத்துகின்றார்.

Related posts

A.L. wild-card தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Blue Jays

Lankathas Pathmanathan

NHL Stanley Cup தொடருக்கு நான்கு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan

B.C உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலி

Lankathas Pathmanathan

Leave a Comment