தேசியம்
செய்திகள்

முதற்குடிகளின்இனப்படுகொலை குறித்த உண்மை மற்றும் நீதி தேவை: Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!

வதிவிட பாடசாலைகளின் குற்றங்களை விசாரிக்க கனடாவுக்கு சிறப்பு வழக்கறிஞர் தேவை என Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கனடாவின் முதற்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களை ஆராய ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க மத்திய அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் Mumilaaq Qaqqaq அழைப்பு விடுத்தார். வதிவிட பாடசாலைகளில் துஷ்பிரயோகம் செய்தவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

முதற்குடி மக்களின் அனைத்து இனப்படுகொலை குறித்த உண்மை மற்றும் நீதி தேவை எனவும் அவர் கூறினார்.

இந்த தேசத்தின்  குற்றத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு வெளிச்சத்தை பிரகாசிக்கும் சக்தியும், குற்றவாளிகளை நீதிக்கு கொண்டு வரும் அதிகாரமும் கொண்ட ஒரு முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணை எங்களுக்கு தேவை என Qaqqaq மேலும் தெரிவித்தார்.

Related posts

மேலதிகமான AstraZeneca தடுப்பூசிகளை ;கனடா பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

Gaya Raja

இந்தியாவுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகளை கனடிய அரசாங்கம் நீக்கியது

Lankathas Pathmanathan

Ontarioவில் எரிபொருளின் விலை  மீண்டும் உயர்கிறது

Leave a Comment