December 12, 2024
தேசியம்
செய்திகள்

AstraZeneca பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசி: அமைச்சர் அனிதா ஆனந்த்!

AstraZeneca ஒரு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான COVID  தடுப்பூசி என கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

Ontario, முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சரின் இந்த கருத்து வெளியானது. AstraZeneca  தடுப்பூசி குறித்து பொதுமக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட  அரசியல் தலைவர்களின் விவரங்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பிரதமர் Justin Trudeau,  எதிர்க்கட்சித் தலைவர்கள் Erin O’Toole, Jagmeet Singh ஆகியோர் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Health கனடா, பாதுகாப்பானதும் பயனுள்ளது என AstraZeneca தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளின்  ஏற்றுமதிகளை அரசாங்கம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் ஆனந்த் கூறினார்.  இதேவேளை தனது இரண்டாவது தடுப்பூசியாக AstraZeneca  தடுப்பூசியை தான் பெற்றுக் கொள்ள தயாராக உள்ளதாக நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது பிரதமர் Trudeau குறிப்பிட்டார்.  

Related posts

புதிய தனிமைப்படுத்தல் விதி விலக்கிலிருந்து கனேடியர்களை விலக்கும் நாடுகள்!

Gaya Raja

Conservative கட்சியின் அடுத்த தலைமை விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை: Leslyn Lewis

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை

Lankathas Pathmanathan

Leave a Comment