தேசியம்
செய்திகள்

கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneauவின் வெளிநாட்டு பயணங்கள் நியாயமானது ;பிரதமர்

கனேடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneauவின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசியமானவை என பிரதமர் நியாயப்படுத்தியுள்ளார்

வெளியுறவு அமைச்சரின் சமீபத்திய மற்றும் வரவிருக்கும் வேலை தொடர்பான வெளிநாட்டு பயணங்கள் இன்றியமையாதவை என பிரதமர் Justin Trudeau கூறினார். வெளியுறவு அமைச்சரினாலும் அவருடன் பயணிக்கும் அதிகாரிகளினாலும் அனைத்து தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைகளும் பின்பற்றப்படும் என பிரதமர் கனேடியர்களுக்கு உறுதியளித்தார். தனது அரசாங்கம் எப்போதும் அத்தியாவசிய பயணங்களின் அவசியத்தை வலியுறுத்தி வருவதாக Trudeau கூறினார்.

G 7 வெளியுறவு மற்றும் மேம்பாட்டு அமைச்சர்களின் நேரடி சந்திப்பில் கலந்துகொள்வதற்காக Garneau
இந்த மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து பயணமாகியிருந்தார். ஐஸ்லாந்தில் உள்ள Arctic Councilலின் 12வது அமைசர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அவர் அடுத்த வாரம் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Stanley Cup: வெளியேற்றப்பட்ட Toronto Maple Leafs!

Ontario வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

கனடா 13 million தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றது!

Gaya Raja

Leave a Comment