April மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் திங்கட்கிழமை கனடாவில் மிகக் குறைந்த தினசரி COVID தொற்றுக்கள் பதிவாகின.
சில மாகாணங்களில் அதிகமான தொற்றின் எண்ணிக்கை பதிவான போதிலும் நாடளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையில் திங்கட்கிழமை தொற்றுக்கள் பதிவாகின. கனடாவில் திங்கட்கிழமை 6,322 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இதற்கு முன்னர் April மாதம் 5ஆம் திகதி 6,264 தொற்றுக்கள் பதிவாகின.
திங்கட்கிழமை 40 மரணங்களும் கனடாவில் பதிவாகின. திங்கட்கிழமை இரவு வரை நாடளாவிய ரீதியில் 3,659 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.