COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை திட்டம் ஒன்றை இன்று Manitoba அறிவித்தது.
Manitobaவின் முதல்வர் Brian Pallister வெள்ளிக்கிழமை இந்த திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டார். தொற்றுடன் தொடர்புடைய ஐந்து நாள் விடுமுறைக்கு மாகாணம் ஒரு ஊழியருக்கு 600 டொலர் வரை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த திட்டம் குறைந்தது September மாதம் 25ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என முதல்வர் அறிவித்தார்.